ஜோகூர் பாருவில் ஆறு மாதங்களுக்கு மேலாகக் கிடந்த சடலம்

ஜோகூர் பாருவில் ஆறு மாதங்களுக்கு மேலாகக் கிடந்த சடலம்

1 mins read
0525add3-8f05-4e87-9299-c7db4d732aa5
(படம்: சாவ்பாவ்) -

ஜோகூர் பாருவிலுள்ள ஒரு வீட்டில் 78 வயது மூதாட்டி ஆறு மாதங்களுக்கு மேலாக இறந்து கிடந்ததாக மலேசிய ஊடகங்கள் கூறுகின்றன.

ஜாலான் செனெக்காவிலுள்ள அந்த வீட்டில் வாடகைக்குத் தங்கியிருந்த அந்த மூதாட்டி, தனியாகவே வசித்ததாகக் கூறப்படுகிறது. வீட்டை விற்பது குறித்து அந்த மூதாட்டியிடம் கலந்து பேசுவதற்காக அவரைக் காணச் சென்ற வீட்டு உரிமையாளர்தான் அவர் இறந்து கிடந்ததைக் கண்டார். சடலத்தின் சதை சிதைந்து எலும்புக்கூடு மட்டுமே தென்பட்டது.

இந்தச் சம்பவத்தில் குற்றச்செயலுக்கான எந்தத் தடயங்களும் காணப்படவில்லை என்று ஜோகூர் மாநில போலிசார் கூறுகின்றனர்.