நீர்வீழ்ச்சிக்குள் விழுந்து இறந்த யானைகளின் எண்ணிக்கை 11க்கு உயர்வு

தாய்லாந்திலுள்ள ஒரு நீர்வீழ்ச்சியில் மொத்தம் 11 யானைகள் விழுந்து இறந்ததாக ஆளில்லா வானூர்திப் படங்கள் காட்டுகின்றன. இந்தச் சம்பவத்தில் இறந்த யானைகளின் எண்ணிக்கை முன்னதாக  ஆறு எனப் பதிவு செய்யப்பட்டிருந்தது.

கடந்த வாரயிறுதியின்போது தாய்லாந்தின் வடகிழக்கிலுள்ள  ஹுாவ் நரோக் நீர்வீழ்ச்சியில் ஆறு யானைகள் விழுந்து மடிந்ததாக தேசிய பூங்காக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர். தண்ணீரில் தத்தளித்துக்கொண்டிருந்த யானைக் கன்று ஒன்றுக்கு ஆற்றங்கரையில் இருந்த இரண்டு யானைகள் நீருக்குள் இறங்கி உதவ முயன்றபோதும் முடியவில்லை . அந்த யானைகள் அதிஷ்டவசமாக உயிர்பிழைத்தன.

ஆளில்லா வானூர்தி ஒன்றிலிருந்து எடுக்கப்பட்ட படங்களில் மேலும் ஐந்து யானைகளின் சடலங்கள் தென்பட்டதாக நகோன் நயோக் மாநில ஆளுநர் நுட்டாபோங்  சிரிசனா தெரிவித்தார். ஆற்று நீரோட்டம் மிகவும் பலமாக இருப்பதால் தாங்கள் சம்பவ இடத்திற்கு நேரடியாகச் செல்ல இயலவில்லை என அவர் கூறினார்.

 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஸ்பெயினின் கட்டலான் பிரிவினைவாதத் தலைவர்களுக்கு நீண்டகாலச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து ஸ்பெயினின் உச்ச நீதிமன்றம், நெடுஞ்சாலைகள் போன்றவற்றில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போலிசார் கண்ணீர்ப்புகை வீசி அவர்களை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். படம்: ஏஎஃப்பி

16 Oct 2019

கட்டலான் தலைவர்களின் சிறைத் தண்டனையை எதிர்த்து ஸ்பெயினில் ஆர்ப்பாட்டம் வலுக்கிறது

தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஸுமா மீது நேற்று நீதிமன்றத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.  படம்: ராய்ட்டர்ஸ்

16 Oct 2019

தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஸுமா மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு