ஆசியான் கூட்டத்தில் புகைமூட்டப் பிரச்சினை

ஆசியான் கூட்டத்தில் புகைமூட்டப் பிரச்சினை

1 mins read

கோலாலம்பூர்: சுற்றுச்சூழல் தொடர்பில் கம்போடியாவில் நடைபெற்று வரும் ஆசியான் அமைச்சரவைக் கூட்டத்தில் எல்லை கடந்த புகைமூட்டப் பிரச்சினை குறித்து மலேசியா பேசும் என்று அந்நாட்டு சுற்றுச்சூழல் அமைச்சர் கூறியுள்ளார்.

நேற்று முன்தினம் தொடங்கிய இந்த நான்கு நாள் கூட்டத்தில், புகைமூட்ட விவகாரம் பற்றி மலேசியா பேசவுள்ளது. சட்டவிரோதமாக திறந்த வெளிகளில் எரியூட்டும் சம்பவங்களால் இந்தோனீசியாவில் காட்டுத் தீ பரவ, அதில் ஏற்பட்ட புகைமூட்டத்தால் சென்ற மாதம் மலேசியா பெரிதும் பாதிக்கப்பட்டது. இதற்கிடையே காட்டுத்தீச் சம்பவங்களுக்குக் காரணமான நான்கு மலேசிய நிறுவனங்கள் குறித்து இந்தோனீசிய அரசாங்கத்திடமிருந்து எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை என்றும் கூறப்பட்டது.