ஜப்பானை நெருங்கும் ‘ஹகிபிஸ்’ புயல்

ஜப்பானியத் தலைநர் தோக்கியோவில் பெரும் சேதத்தை ஏற்படுத்தக்கூடிய புயல் காற்று வரும் சனிக்கிழமை அந்நாட்டை புரட்டிப்போடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பசிஃபிக் பெருங்கடலில் தற்போது சென்றுகொண்டிருக்கும் இந்தப் புயலால் உலகக் கிண்ண ரக்பி போட்டியின் இரண்டு ஆட்டங்கள் ஏற்கெனவே ரத்து செய்யப்பட்டன.

வியாழக்கிழமை உள்ளூர் நேரப்படி காலை ‘ஹகிபிஸ்’ என்ற அந்தப் புயல், தோக்கியோவின் தெற்கிலிருந்து ஏறக்குறைய 1,529 கிலோமீட்டர் தூரத்தில் இருப்பதை குவாம் தீவிலுள்ள தேசிய வானிலை சேவை தெரிவித்தது.

மணிக்கு 14.5 கிலோமீட்டர் வேகத்தில் வடக்குமுகமாக சென்று கொண்டிருந்த அந்தப் புயல்காற்று, சனிக்கிழமை இரவு ஜப்பானின் கிழக்குக் கரை வழியாகச் செல்லும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.

புயல் காற்றின் வேகம் மணிக்கு 257 கிலோமீட்டர் எனச் செயற்கைக்கோள்கள் கணித்துள்ளன. இந்த வேகம் அதிகபட்சமாக மணிக்கு 270 கிலோமீட்டர் வீசும் என்று ஜப்பானிய வானிலை ஆய்வகம் தெரிவித்தது. ஜப்பானை அடையும் தறுவாயில் புயல்காற்றின் வேகம் மணிக்கு 145 கிலோமீட்டருக்கு குறையும் என்றும் முன்னுரைக்கப்பட்டுள்ளது.

மிக மோசமான வானிலைக்குத் தயாராகுமாறு பொதுமக்களை ஜப்பானிய அரசு ஊடகமான என்ஹெச்கே கேட்டுக்கொண்டுள்ளது. இந்தப் புயல்காற்றை முன்னிட்டு ரயில் சேவைகள் சிலவற்றை ரத்து செய்வதாக ஜப்பானின் ரயில் நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. அத்துடன், வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை தனது விமானச் சேவைகள் அனைத்தையும் நிறுத்தப்போவதாக ஜப்பானிய ஏர்லைன்ஸ் நிறுவனமும் ஆல் நிப்பான் ஏல்லைன்ஸ் நிறுவனமும் தெரிவித்துள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!