ஹாங்காங் ரயில் நிலையங்கள் நேற்றும் முன்கூட்டியே மூடப்பட்டன

ஹாங்காங் ரயில் நிலையங்கள் நேற்றும் முன்கூட்டியே மூடப்பட்டன

2 mins read
12c14700-f58d-471a-8adf-e0d87d639934
இம்மாதம் 1ஆம் தேதி ஹாங்காங்கின் வோங் தை சின் எம்டிஆர் ரயில் நிலையத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டக் காரர்களும் கலகத் தடுப்பு போலிசாரும் மோதிக் கொண்டனர். படம்: நியூயார்க் டைம்ஸ் -

ஹாங்காங்: எம்டிஆர் ரயில் நிலையங்களில் ஏற்பட்ட சேதத்தைப் பழுதுபார்ப்பதற்கு ஏதுவாக, ஹாங்காங்கின் மெட்ரோ ரயில் நிலையங்கள் நேற்றும் முன்கூட்டியே மூடப்பட்டன.

மேலும் அதிகமான அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெறக்கூடும் என்ற அச்சத்தால் ரயில் நிலையங்கள் மூடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

எம்டிஆர் ரயில் கட்டமைப்பில் ஒரு நாளைக்கு ஐந்து மில்லியன் பேர் பயணம் செய்கின்றனர். அதிக மான மக்கள் வசிக்கும் நகரின் 'நியூ டெரிரோரிஸ்' பகுதியில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களும் நேற்று வழக்கமாக மூடப்படும் நள்ளிரவுக்குப் பதில் இரவு 9 மணிக்கே மூடப்பட்டன.

கடந்த வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டக்காரர்கள் நடத்திய தாக்குதல்களுக்குப் பிறகு பல ரயில் நிலையங்களில் கடுமையான சேதங்கள் ஏற்பட்டன. அன்று முதல் ரயில் கட்டமைப் பின் சில பகுதிகள்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

கடந்த வார இறுதியில் ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் போலிசுக்கும் இடையே நிகழ்ந்த கடுமையான போராட்டங்களுக்குப் பிறகு ஹாங்காங் சிறிது சிறிதாக வழக்கநிலைக்குத் திரும்பி வருகிறது.

போராட்டங்களில் பங்கேற்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்றுகூட, ரயில்கள் வருவதைத் தடுக்கும் பொருட்டு அரசாங்கம் எம்டிஆர் ரயில் நிலையங்கள் பலவற்றை மூடியதால், அதன் பிறகு நடத்தப் பட்ட போராட்டங்களில் ரயில் நிலையங்களும் தாக்குதலுக்கு ஆளா ன.

பொருளியல் மந்தநிலையை நோக்கி உலக நிதி நெருக்கடியை அடுத்து ஹாங்காங் இப்போது பொருளியல் மந்தநிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்றும் அதிலிருந்து மீள அதிக காலம் பிடிக்கும் என்றும் பொருளியல் நிபுணர்கள் கருத்துரைத்து இருக்கின்றனர்.

சென்ட்ரல், காஸ்வே பே, கவ்லூன் போன்ற சுற்றுப்பயணிகள் அதிகம் கூடும் இடங்களில் சொகுசு ஹோட்டல்கள், பிரதான கடைத்தொகுதிகள், அக்கம்பக்க கடைகள், உணவகங்கள் ஆகி யவை தங்கள் அன்றாட வர்த்த கத்தை முன்கூட்டியே முடித்துக் கொள்கின்றன.

ஒருவேளை அவை திறந்திருந்தாலும் கடைகள், விமான நிலையங்கள் போன்றவற்றில் சுற்றுப்பயணிகள் அதிகம் வருவதில்லை என்ற காரணத்தால் அமைதியாகவே உள்ளன.

"நிலைமையை முன்னைய வழக்கநிலைக்குக் கொண்டு வர ஆக்கபூர்வமான முயற்சிகள் எடுக்கப்படுவதாகத் தெரியவில்லை," என்றார் பிக்டெட் வெல்த் மேனேஜ் மண்ட் நிறுவனத்தின் மூத்த ஆசிய பொருளியல் நிபுணர் திரு டோங் சென்.

"அரசாங்க எதிர்ப்பு போராட்டங் களுக்குப் பிறகு ஹாங்காங் அர சாங்கம் நீண்டகாலத் திட்டம் அல்லது அடிப்படைப் பிரச்சினைகளுக்

குத் தீர்வு காணுதல் ஆகியவற்றில் தீவிர கவனம் செலுத்த வேண்டும்," என்று திரு சென் கூறினார்.

ஹாங்காங்கில் சீனாவின் தோல்வி

ஹாங்காங்கில் ஏற்பட்டுள்ள கடும் போராட்டங்கள் சீனாவின் தோல்வியைப் பிரதிபலிக்கின்றன என்று தைவான் அதிபர் சாய் லிங் வென் நேற்று கூறினார்.

தைவானின் தேசிய தினமான நேற்று பேசிய திருவாட்டி சாய், "ஜனநாயகத்துக்கு ஆபத்து நேரு மானால் அதைக் கட்டிக்காக நாம் நிமிர்ந்து நிற்க வேண்டும். அதிபர் என்ற முறையில் தைவானின் இறை யாண்மையைக் காக்கும் பொறுப்பு எனக்கு உண்டு," என்றார்.