கலிபோர்னியா: அமெரிக்காவில் உள்ள கலிஃபோர்னியாவின் வடக்கு பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயை அணைக்க 800,000 வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் என பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. சான் ஃபிரான்சிஸ்கோவின் கடற்கரைப் பகுதியின் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் கோபமடைந்தனர்.
அங்கு மின்சாரம் விநியோகிக்கும் நிறுவனமான 'பசிபிக் கேஸ் எலெக்ட்ரிக்', இந்த மின்சார துண்டிப்பு இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும் என தெரிவித்துள்ளது.
அந்த நிறுவனத்தின் மின்சார கம்பிகளால் கடந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவுவுக்கு காட்டுத்தீ ஏற்பட்டது. அதிகப்படியான காற்றடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால், மேலும் காட்டுத்தீ பரவாமல் இருப்பதைத் தடுக்க இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அந்தப் பகுதியில் கடந்த ஆண்டு ஏற்பட்ட காட்டுத்தீ சம்பவத்தால் 150,000 ஏக்கர் நிலம் தீயில் கருகியது. அதில் 86 பேர் உயிரிழந்தனர்.
'பசிபிக் கேஸ் மற்றும் எலெக்ட்ரிக்' நிறுவனத்தின் மோசமான உபகரணங்களே இந்த காட்டுத்தீ சம்பவத்திற்கு காரணம் என்று கூறப்பட்டது.

