எத்தியோப்பியப் பிரதமருக்கு அமைதிக்கான நோபெல் பரிசு

ஓஸ்லோ: எத்தியோப்பியப் பிரதமர் அபி அகமதுக்கு இவ்வாண்டின் அமைதிக்கான நோபெல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டது. 

நீண்டகால பகைமை கொண்ட எத்தியோப்பியாவுக்கும் எரிட்டிரியாவுக்கும் இடையே 1998ஆம் ஆண்டிலிருந்து 2000ஆம் ஆண்டு வரை எல்லைப் போர் நடந்தது.

இரு நாடுகளும் கடந்த ஆண்டு உறவுகளைப் புதுப்பித்துக்கொண்டன. எரிட்டிரியாவுடனான எல்லைப் பிரிச்சினையை ஒரு முடிவுக்குக் கொண்டு வரவும் அமைதியை நிலைநாட்டவும் அனைத்துலக நாடுகளுடன் ஒத்துழைக்கவும்  திரு அபி அகமது கடுமையாக உழைத்ததாக நோபெல் குழு கூறியது.

எத்தியோப்பிய நாட்டவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த அவர் பல முக்கியமான திட்டங்களை நடைமுறைப்படுத்தியதாகவும் குழு கூறியது.