‘தாய்லாந்தில் அமைதியை சீர்குலைக்க சதி’

பேங்காக்: ஹாங்காங்கில் நடக்கும் போராட்டங்களைப் போலவே தாய்லாந்திலும் நடத்தி நாட்டில் அமைதியைச் சீர்குலைக்க சதி வலை பின்னப்படுவதாக தாய்லாந்தின் ராணுவத் தலைவர் ஜெனரல் அபிராட் கொங் சொம்போங் தெரிவித்துள்ளார்.

தாய்லாந்தின் ராணுவத் தலைவராக கடந்த மாதம் பதவியேற்ற ஜெனரல் அபிராட் தலைநகர் பேங்காக்கில் உள்ள ராணுவத் தலைமையகத்தில் உரையாற்றியபோது இத்தகவலை நேற்று வெளியிட்டார்.

ஹாங்காங்கில் நடத்தப்படும் போராட்டங்களைப் போலவே தாய்லாந்திலும் நடத்த  சமூக ஊடகத்தைப் பயன்படுத்தி இளையர்களைச் சிலர் தூண்டுவதாக அவர் கூறினார்.

தாய்லாந்து அரசியல்வாதி ஒருவரை ஹாங்காங் சமூக ஆர்வலர் ஜோஷ்வா வோங் அண்மையில் சந்தித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

இரண்டு மடங்கு பெரிதாக விரிவாக்கம் காணவுள்ள
தஞ்சோங் பெலெபாஸ் துறைமுகம். படம்: பெலெபாஸ் துறைமுகம்

15 Oct 2019

ஜோகூரின் தஞ்சோங் பெலெபாஸ் துறைமுகம் 2030க்குள் இரு மடங்கு பெரிதாகும்