அமெரிக்க-சீன வர்த்தகப் போரில் திருப்பம்

வாஷிங்டன்: அமெரிக்க-சீன வர்த்தகப் போரில் திடீர் திருப்பமாக இரு நாடுகளுக்கு இடையே முதல் கட்ட ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

இதனால் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் சீனாவுக்கான வரி விதிப்பை தற்காலிகமாக நிறுத்த உத்தரவிட்டுள்ளார்.

இருந்தாலும் முதல் கட்ட உடன்பாடு இறுதி செய்யப்பட வேண்டும் என்று அதிகாரிகள் கூறினர்.

இரு நாடுகளுக்கு இடையிலான உடன்பாட்டின் ஒரு பகுதியில் வேளாண்மை, நாணயம் மற்றும் அறிவுசார் சொத்தின் பாதுகாப்பு ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன.

முதல் கட்ட ஒப்பந்தம் பற்றிய அறிவிப்பில் மேல் விவரங்கள் வெளியிடப்படவில்லை. ஒப்பந்தம் எழுத்துப்பூர்வமாக தயாரிப்பதற்கு ஐந்து வார காலம் ஆகலாம் என்று அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

“தாளில் எழுதப்பட்டாெலாழிய நாங்கள் இந்த உடன்பாட்டில் கையெழுத்திட மாட்டோம்,” என்று வெள்ளை மாளிகையில் இரு தரப்பினரும் ஒன்றுகூடியபோது ஸ்டீவன் மினுச்சின் தெரிவித்தார்.

சீன துணைப் பிரதமர் லியு ஹி அமர்ந்திருக்க, செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், வர்த்தகப் பிரச்சினைக்கு முடிவு கட்ட இரு தரப்பினரும் நெருங்கி வந்துஉள்ளதாகத் தெரிவித்தார். 

இதற்கிடையே அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான முதல் கட்ட ஒப்பந்தம் அமெரிக்க பங்குச் சந்தையிலும் எதிரொலித்தது.

அமெரிக்க பங்குகளின் மதிப்பு சுமார் ஒரு விழுக்காடு கூடியது.

சிலியில் நவம்பர் 16ஆம் தேதி ஆசிய பசிபிக் பொருளியல் ஒத்துழைப்பு நாடுகளின் உச்சநிலை மாநாடு நடைபெறுகிறது. 

இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் சீன அதிபர் ஸி ஜின்பிங்கும் சந்தித்துப் பேசவுள்ளனர்.

இந்த நிலையில் முதல் கட்ட உடன்பாடு காணப்பட்டுள்ளது.

இரு பெரும் பொருளியல் நாடுகளுக்கு இடையே 15 மாதங்களுக்கு மேலாக நீடிக்கும் வர்த்தகப் போரி னால்  உலகப் பொருளியல் ஆட்டம் கண்டுள்ளது.

இரு தரப்பிலும் பில்லியன் கணக்கான டாலர் மதிப்புள்ள வரி விதிப்பை பதிலுக்குப் பதில் அறி வித்து வருகின்றன. 

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 250 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களுக்கு வரி 25%லிருந்து 30%க்கு அதிகரிக்கப்ப டும் என்று அமெரிக்கா அண்மையில் அறிவித்தது. ஆனால் 

இதனை அதிபர் டிரம்ப் தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைத்து உள்ளார்.

Loading...
Load next