துருக்கி ஆதரவு படையினர் தாக்கி 74 குர்தியர்கள் பலி

பெய்ருட்: சிரியாவில் குர்திய படை வீரர்களுக்கு ஆதரவாக இருந்த அெமரிக்கப் படைகள் திடீரென விலக்கிக் கொள்ளப்பட்டதால் துருக்கிக்கு கொண்டாட்டமாகிவிட்டது. தனித்துவிடப்பட்ட குர்திய படையினரை அது கடுமையாகத் தாக்கி வருகிறது.

இதில் டெல் அப்யாட் வட்டாரத்தைச் சேர்ந்த 74 குர்திய வீரர்கள் கொல்லப்பட்டதாக சிரியாவின் மனித உரிமை கண்காணிப்பு நிலையம் தெரிவித்தது. அந்த நிலையத்தின் இயக்கு நரான ரமி அப்துல்ரஹ்மான், துருக்கிய ஆதரவு சிரியா கிளர்ச்சி யாளர்கள் தாக்கியதில் 49 பேர் கொல்லப்பட்டனர் என்றார்.

குவாமிஷ்லி நகரில் மட்டும் பொதுமக்கள் உட்பட இறந்தவர்களின் எண்ணிக்கை 20க்கு அதி கரித்துள்ளது என்று அவர் கூறினார். 

இதற்கிடையே வடக்கு சிரியாவின் கோபானி நகரில் தளமிட்டுள்ள அமெரிக்க படைகள் தாக்கப் பட்டுள்ளதாக  அமெரிக்க தற்காப்பு அமைச்சு நேற்று தெரிவித்தது. அமெரிக்க படைகள் இருக்கும் இடத்தை அறிந்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

ராணுவச் சாவடிக்கு ெவளியே குண்டு வெடித்தது என்று நேற்று வெளியிட்ட அறிக்கையில் அமெரிக்க கடற்படையின் புருக் டெவால்ட் தெரிவித்தார். “அனைத்து வீரர்களும் பாது காப்புடன் உள்ளனர். ஆனால் இந்தச் சம்பவம் அமெரிக்கப் படை களுக்கு உள்ள ஆபத்தை வெளிப் படுத்தியிருக்கிறது,” என்று அவர் கூறினார்.

“அமெரிக்கப் படைகளுக்கு இனியும் சேதம் ஏற்படாமல்  இருக்க  நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. எந்த இடத்திலிருந்து தாக்குதல் நடத்தப்பட்டதோ, அந்த இலக்கை நோக்கி பதிலடியும் தரப்பட்டுள்ளது,” என்று அவர் குறிப்பிட்டார்.

சிரியாவுக்குள் நுழையும் துருக்கியின் முயற்சி வட்டாரத்தின் நிலைத்தன்மையை பாதிக்கும் என்று முன்னதாக அமெரிக்க தற்காப்பு அமைச்சு எச்சரித்தது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஸ்பெயினின் கட்டலான் பிரிவினைவாதத் தலைவர்களுக்கு நீண்டகாலச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து ஸ்பெயினின் உச்ச நீதிமன்றம், நெடுஞ்சாலைகள் போன்றவற்றில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போலிசார் கண்ணீர்ப்புகை வீசி அவர்களை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். படம்: ஏஎஃப்பி

16 Oct 2019

கட்டலான் தலைவர்களின் சிறைத் தண்டனையை எதிர்த்து ஸ்பெயினில் ஆர்ப்பாட்டம் வலுக்கிறது

தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஸுமா மீது நேற்று நீதிமன்றத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.  படம்: ராய்ட்டர்ஸ்

16 Oct 2019

தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஸுமா மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு