மனைவி, குழந்தைகளைக் கொன்று தலைமறைவான பிரெஞ்சு ஆடவர் சிக்கினார்

பாரிஸ்: மனைவியையும் நான்கு குழந்தைகளையும் கொன்றுவிட்டு எட்டு ஆண்டுகளாக தலை மறைவாக இருந்த பிரெஞ்சு ஆடவர் ஸ்காட்லாந்தில் கைது செய்யப்பட்டு உள்ளார்.

2011ஆம் ஆண்டில் நடந்த விசித்திரமான கொலை வழக்கில் சேவியர் டுபோன்ட் டெ லிகனோஸ் என்பவருக்கு எதிராக அனைத்துலக கைது ஆணை பிறப்பிக்கப்பட்டது. சென்ற வெள்ளிக்கிழமை பாரிஸ் நகரிலிருந்து ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ விமான நிலையத்துக்கு வந்த அவரை அதிகாரிகள் மடக்கிப் பிடித்தனர்.

கைவிரல் ரேகை அவருடன் ஒத்துப்போனாலும் மரபணு சோதனையில்தான் அவர்தான் என உறுதிபடுத்தப்படும் என்று அவர் கூறினார். போலி கடவுச்சீட்டின் மூலம் ஊர் ஊராகச் சுற்றித் திரிந்த 58 வயது டுபோன்ட் டெ லிகனோஸ்,  தமது பெரும்பாலான வாழ்க்கையை பிரிட்டனில் கழித்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

2011ஆம் ஆண்டில் 58 வயது டுபோன்ட் டெ லிகனோஸ் தனது வீட்டில் குடும்பத்தினரை துப்பாக்கி யால் சுட்டு மொட்டை மாடியில் புதைத்துவிட்டார்.

மூன்று வாரத்திற்குப் பிறகு உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.