விடுதலைப் புலிகளுடன் தொடர்பு; சந்தேகத்தின்பேரில் மேலும் ஐவர் கைது

கோலாலம்பூர்:  தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் (எல்டிடிஇ) தொடர்புகொண்ட சந்தேகத்தின் பேரில் மலேசியாவில் மேலும் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் மலாக்கா, பினாங்கு, சிலாங்கூர் ஆகிய பகுதிகளில்  தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு உள்ளதாக மலேசியாவின் ‘த ஸ்டார்’ செய்தி நிறுவனம் கூறி யிருந்தது. 

ஏற்கெனவே எல்டிடிஇக்கு ஆதரவாக இயங்கியதன் சந்தேகத்தில் வியாழக்கிழமை அன்று இரு அரசியல்வாதிகள் உட்பட எழுவர் கைது செய்யப் பட்டனர். 

சந்தேக நபர்களின் பெயர்களை போலிசார் தெரியப்படுத்தாத நிலையில், அதன் இரு சட்டமன்ற உறுப்பினர்கள் கைதாகி உள்ளதாக பக்கத்தான் ஹரப்பானின் கீழ்  உள்ள ஜனநாயக செயல் கட்சி உறுதிப்படுத்தியது. 

இந்த கைது நடவடிக்கை தொடர்பில் இன்று சிறப்பு செய்தியாளர் கூட்டத்திற்கு போலிசார் ஏற்பாடு செய்துள்ளனர்.

Loading...
Load next