சுல்தானை அவமதித்த பதிவு; நஜிப்பிடம் விசாரணை

கோலாலம்பூர்: சிலாங்கூர் சுல்தான் ஷரஃபுடின் இட்ரிஸ் ஷாவை அவமதிக்கும் வகையில் இருந்ததாகக் கூறப்படும்  ஃபேஸ்புக் பதிவு தொடர்பில் மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கை போலிசார் விசாரிக்க விருக்கின்றனர். இதன் தொடர்பில் திரு நஜிப்புடன் தொடர்பு கொண்டதாக புக்கிட் அமான் முதன்மை உதவி இயக்குநர் மூத்த உதவி ஆணையர் மியோர் ஃபரிடாலாடிராஷ் வாஹித் நேற்று தெரிவித்தார்.

“புக்கிட் அமானுக்கு வந்து விசாரணையில் எங்களுக்கு உதவ அவர் சம்மதித்துள்ளார். ஏற்கெனவே தேச நிந்தனை விசாரணையை முடித்துள்ளோம். தற்போது அவமதித்தது தொடர்பான விசாரணையை தொடங்கியுள்ளோம்,” என்று அவர் சொன்னார்.

Loading...
Load next