மலேசியாவின் கைது நடவடிக்கை இலங்கைத் தமிழருக்கு எதிரானது அல்ல: அன்வார்

மலேசியாவின் கைது நடவடிக்கை இலங்கைத் தமிழருக்கு எதிரானது அல்ல: அன்வார்

2 mins read
ec4c51e6-d7b8-4228-9714-4e859138d7de
எல்டிடிஇ முறியடிப்பு நடவடிக்கைக்கு சோஸ்மா சட்டம் பயன்படுத்தப்படுவதை வரவேற்ற திரு அன்வார், அதன் சில பகுதிகள் திருத்தப்பட வேண்டும் என்றார்.  -

எல்டிடிஇ இயக்கத்தை ஆதரித்ததற்காக பிகேஆர் கட்சியைச் சேர்ந்த ஏராளமானோர் கைது செய்யப்பட்டதாக வெளிவந்த தகவலை அக்கட்சியின் தலைவர் அன்வார் இப்ராகிம் மறுத்துள்ளார். "புக்கிட் அமான் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் நடவடிக்கையில் பிகேஆர் கட்சியின் இன்னாள், முன்னாள் உறுப்பினர்கள் எவரும் பிடிபட்டதாக எனக்குத் தகவல் இல்லை," என்றார் அவர்.

எல்டிடிஇ தமிழீழ விடுதலைப் புலிகளை ஆதரித்ததற்காக சனிக்கிழமை மேலும் ஐவர் கைது செய்யப்பட்டபோது அவர்களில் நால்வர் பிகேஆர் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல் பரவியது. எல்டிடிஇ முறியடிப்பு நடவடிக்கைக்கு சோஸ்மா சட்டம் பயன்படுத்தப்படுவதை வரவேற்ற திரு அன்வார், அதன் சில பகுதிகள் திருத்தப்பட வேண்டும் என்றார்.

இச்சட்டத்தின் சில அம்சங்களைத் தொடக்கம் முதலே நாங்கள் எதிர்த்து வருகிறோம். அந்த எதிர்ப்பு எல்டிடிஇ முறியடிப்பு உள்ளிட்ட மற்ற நடவடிக்கைகள் தொடர்பானதல்ல," என்றார் அவர்.

எல்டிடிஇ வேறு; இலங்கைத் தமிழர்கள் வேறு இதற்கிடையே, மலேசியா மேற்கொண்டு வரும் கைது நடவடிக்கை இலங்கைத் தமிழருக்கு எதிரானது அல்ல என்றும் எல்டிடிஇ தொடர்பானது என்றும் இரண்டையும் சேர்த்துப் பார்த்து குழம்பவேண்டாம் என்றும் பயங்கர

வாதத் தடுப்பு சிறப்புப் பிரிவின் துணைத் தலைமை ஆணையர் அயூப் கான் மைதின் பிச்சை கேட்டுக்கொண்டுள்ளார். வியாழக்கிழமை இரு சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏழு மலேசியர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளை ஆதரித்த சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர். நேற்று முன்தினம் மேலும் ஐவர் கைதாயினர்.

இந்நிலையில், எல்டிடிஇ தொடர்பு காரணமாக ஜோகூர் மாநிலத்தைச் சேர்ந்த எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்று மாநில தலைமை போலிஸ் ஆணையாளர் மகமது கமாருதீன் முகமது டின் நேற்று கூறினார். அதேநேரம் இவ்விவகாரம் தொடர்பில் சிகாமாட்டில் உள்ள வீடு ஒன்றில் போலிசார் சோதனை நடத்தியதாக அவர் தெரிவித்தார்.