மலேசியப் பிள்ளைகளைக் கொடுமைப்படுத்தியவர் சிறையில் கொல்லப்பட்டார்

மலேசியப் பிள்ளைகளைக் கொடுமைப்படுத்தியவர் சிறையில் கொல்லப்பட்டார்

1 mins read
bb916e7c-ec57-41d4-94a1-bd92d648bdfd
-

லண்டன்: மலேசியாவில் ஏறத்தாழ 200 சிறுவர்களையும் குழந்தைகளையும் பாலியல் வன்கொடுமை செய்த பிரிட்டிஷ் ஆடவர் பிரிட்டனில் உள்ள சிறையில் கொல்லப்பட்டார்.

33 வயது ரிச்சர்ட் ஹக்கல் (படம்) நேற்று கத்தியால் குத்திக் கொல்லப்பட்டதாகச் சிறை அதிகாரிகள் தெரிவித்தனர். 2006ஆம் ஆண்டுக்கும் 2014ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் மலேசியாவில் உள்ள பல சிறுவர்களையும் குழந்தைகளையும் பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்காக ஹக்கலுக்கு 22 ஆயுள் தண்டனைகள் வழங்கப்பட்டன.

ஆறு மாதக் குழந்தையிலிருந்து 12 வயது சிறுவர் வரை அவரால் பாதிக்கப்பட்டனர்.

ஹக்கலுடன் ஒரே சிறை அறையில் இருந்த கைதி ஒருவர் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகவும் கொலை தொடர்பாக விசாரணை நடத்தப்படுவதாகவும் அதிகாரிகள் கூறினர்.