தேவையில்லாமல் வரிகளை உயர்த்தப்போவதில்லை: மலேசிய நிதியமைச்சர்

தேவையில்லாமல் வரிகளை உயர்த்தப்போவதில்லை: மலேசிய நிதியமைச்சர்

1 mins read
3d592ac6-4649-4085-9d14-7b0e87666652
-

மலேசிய அரசாங்கம் தேவையின்றி வரிகளை உயர்த்தாது என்று அந்நாட்டின் நிதியமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்திருக்கிறார். அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான மோதல் மலேசிய வரவு செலவுத் திட்ட இலக்குகளுக்கு முட்டுக்கட்டைகளை ஏற்படுத்தும் இந்நிலையில் திரு லிம் இவ்வாறு கூறியுள்ளார்.

அரசாங்கம் தனக்குக் கட்டுப்படியாகும் தொகையைத்தான் செலவு செய்யும் என்றும் சில உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு நிதி கொடுப்பதற்காக வரிகளை அதிகரிக்காது என்றும் திரு லிம், புளூம்பர்க் தொலைக்காட்சிக்கு இன்று அளித்த பேட்டியில் கூறினார்.

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகப் பதற்றம் தீர்க்கப்பட்டால் மலேசிய அரசாங்கம் ஐந்து ஆண்டுகளில் சமநிலைப் படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்டத்தை அமைக்கலாம் என்று திரு லிம் கூறினார்.

முதலீட்டாளர்களைத் தன்வசம் ஈர்ப்பதற்கான சிறந்த வாய்ப்பை இந்த வர்த்தகப் போர் மலேசியாவுக்கு அளிப்பதாகக் கூறிய திரு லிம், கடந்த வெள்ளிக்கிழமை மேலும் அதிகமான மேம்பாட்டுத் திட்டச் செலவுகளை அறிவித்தார். அத்துடன், முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கான திட்டங்களையும் அவர் அறிவித்தார்.