ஜோகூரின் தஞ்சோங் பெலெபாஸ் துறைமுகம் 2030க்குள் இரு மடங்கு பெரிதாகும்

கோலாலம்பூர்: மலேசியாவின் தென்கோடியில் உள்ள துறைமுகமான தஞ்சோங் பெலெபாஸ் விரிவாக்கம் காணவுள்ளது.

வரும் 2030ஆம் ஆண்டுக்குள் அந்தத் துறைமுகம் இரண்டு மடங்கு பெரிதாகும் என்று அந்நாட்டு போக்குவரத்துத் துறை அமைச்சர் அந்தோணி லோக் நேற்று ஜோகூர் பாருவில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

விரிவாக்கப் பணிகள் முடிந்த பின் தஞ்சோங் பெலெபாஸ் துறைமுகத்தில் 30 மில்லியன் சிறிய கொள்கலன்களை (20 அடி நீளம்) சேமித்து வைக்கவும் கையாளவும் முடியும்.

இப்போது அந்தத் துறைமுகத்தில் 12.5 மில்லியன் சிறிய கொள்கலன்களை மட்டுமே கையாள முடியும்.

துறைமுகத்தின் விரிவாக்கப் பணி ஆண்டுக்கு எட்டு முதல் ஒன்பது விழுக்காடு என படிப்படியாக மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

“அதிகமான சரக்குக் கப்பல்கள் வரவுடன் விறுவிறுப்புடன் இயங்கிக்கொண்டிருக்கும் பெலெபாஸ் துறைமுகம் இன்னும் மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு விரிவாக்கம் காணப்படவில்லையெனில், சிரமப்படவேண்டியிருக்கும். நாம் அந்த நிலையை எட்டும் வரை காத்திருக்கக்கூடாது,” என்றார்.

“கடந்த ஆண்டில் மட்டும் 8.96 மில்லியன் சிறிய கொள்கலன்களை பெலெபாஸ் துறைமுகம் கையாண்டுள்ளது. மேலும் உலகச் சாதனையை எட்டும் வகையில் கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் 19,574 கொள்கலன்களைக் கையாண்டுள்ளது. இதன்மூலம் நாட்டுக்கு 7 விழுக்காடு வளர்ச்சி கிட்டியுள்ளது,” என்றும் அவர் கூறினார்.

“மலேசியாவை கவர்ச்சிமிகு கப்பல் துறைமுகமாக மாற்றுவதற்கு துறைமுகம் சார்ந்த முக்கிய பணிகள் யாவும் மின்னியல்படுத்தப்படும்.

“அதன்மூலம் துறைமுகம் தொடர்பான வர்த்தகர்களுக்கான விதிமுறைகள் தளர்த்தப்படும்,” என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

துறைமுகங்களில் சரக்குக் கொள்கலன்களைப் பத்திரப்படுத்துதல், மலேசியாவுக்குள் கொள்கலன்களில் ஏற்றப்படும் சில பொருட்களுக்கு அனுமதி அல்லது உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

துறைமுக மேம்பாட்டிற்குப் பின்னர் இதுபோன்ற விதிகள் தளர்த்தப்பட்டு துறைமுகத்தை எளிதில் பயன்படுத்தும் முறை அறிமுகப்

படுத்தப்படும் என்றும் தெரிகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!