குர்தியப் போராளிகளுக்கு சிரியப் படையினர் உதவி

குர்தியப் போராளிகளுக்கு சிரியப் படையினர் உதவி

2 mins read

பெய்ருட்: குர்தியப் போராளிகளை வீழ்த்த துருக்கி ஆதரவுப் படைகள் சிரியாவின் வடகிழக்குப் பகுதிக்குள் புகுந்துள்ளன.

கடந்த சில நாட்களாக நடத்தப்பட்ட தாக்குதல்களில் பல குர்தியப் போராளிகள் மாண்டனர். நூற்றுக்கணக்கான குர்தியர்கள் தங்கள் வசிப்பிடங்களை விட்டு தப்பி ஓடினர். ஐஎஸ் பயங்கரவாதிகளை வீழ்த்தியதில் குர்தியப் போராளிகளின் பங்கு மிகவும் பெரியது. சிரியாவில் செயல்படும் குர்தியப் போராளிகளை துருக்கி பயங்கரவாதிகளாகக் கருதுகிறது.

துருக்கியில் இருக்கும் குர்திய அமைப்புகள் தனிநாடு கேட்டு நீண்டகாலமாகப் போராடுவதே இதற்குக் காரணம்.

இந்நிலையில், சிரியாவில் உள்ள குர்தியப் போராளிகளை வீழ்த்த துருக்கிப் படைகளை அனுப்பியுள்ளது. ஐஎஸ் பயங்கரவாதிகளை அழிக்கும் போரில் அமெரிக்காவுக்கு முக்கிய பங்காளிகளாக இருந்தனர் குர்தியப் போராளிகள்.

தற்போது அவர்களைத் துருக்கி முழுவீச்சுடன் தாக்கி வரும் நிலையில், குர்தியர்களுக்கு உதவி செய்யாமல் பின்வாங்கிய அமெரிக்காவுக்கு எதிராக அதிருப்தி குரல்கள் எழுந்துள்ளன. குர்தியர்களுக்கு அமெரிக்கா நம்பிக்கை துரோகம் இழைத்துவிட்டதாக சில அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

துருக்கி தாக்குதல்களை நடத்தி சில நாட்கள் ஆகியுள்ள நிலையில், வடகிழக்கு சிரியாவில் எஞ்சியிருக்கும் அதன் 1,000 ராணுவ வீரர்களை மீட்டுக் கொள்ளப்போவதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் நேற்று முன்தினம் அறிவித்தார்.

இந்நிலையில், துர்தியப் படைகளுடன் செய்துகொண்ட உடன்

படிக்கையை அடுத்து, சிரியாவின் ராணுவ வீரர்கள் நாட்டின் வட

கிழக்குப் பகுதிக்குள் நுழைந்துள்ளது. துருக்கி ஆதரவுப் படைகளுக்கு எதிராகப் போரிட்டு குர்தியப் போராளிகளுக்கு உதவ சிரியாவின் ராணுவம் தாக்குதல் நடக்கும் இடங்களுக்கு விரைந்துள்ளது.

குர்தியப் போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு நீண்டகாலம் கழித்து சிரிய ராணுலம் திரும்பியிருக்கிறது. இந்த சிரிய அதிபர் பஷார் அல் அசாத்துக்குக் கிடைத்துள்ள வெற்றி எனக் கூறப்

படுகிறது.