சுடச் சுடச் செய்திகள்

எல்டிடிஇயின் முக்கிய உறுப்பினர் கைது; ஆயுதங்கள் பறிமுதல்

தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் (எல்டிடிஇ) முக்கிய உறுப்பினர் ஒருவர் இலங்கையின் கிளிநொச்சிக்கு அருகில் உள்ள அம்பாலம்குளத்தில் நடத்திவந்த காப்பகத்தை, கடந்த வெள்ளிக்கிழமை (அக்டோபர் 11) சோதனையிட்ட போலிசார், ஏராளமான வெடிபொருட்களையும் ஆயுதங்களையும் கைப்பற்றினார்கள். 

ஜோசப் பீட்டர் ராபின்சன் என்ற அந்த 36 வயது ஆடவர், கிளிவேடி பாலத்திற்கு அருகில் ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு, அதே நாளன்று கிளிநொச்சி போலிசாரிடம் புலன்விசாரணைக்கு ஒப்படைக்கப்பட்டார். 

சந்தேக நபரிடமிருந்து கிடைத்த தகவலின்படி, ஐந்து கையெறி குண்டுகள், சி4 வெடிபொருள்கள், தோட்டாக்கள், துப்பாக்கிகள், கத்தி, கேமரா, இரட்டைத் தொலைநோக்கி, ஏழு மடிக்கணினிகள், நான்கு கைபேசிகள், விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படம் கொண்ட நான்கு டி-சட்டைகள், கறுப்பு முகமூடி ஆகியவற்றை போலிசார் கைப்பற்றினர்.