சிறையில் கொல்லப்பட்ட கொடூரன்: மலேசியர்களுக்கு நியாயம் மறுக்கப்பட்டுள்ளது

சிறையில் கொல்லப்பட்ட கொடூரன்: மலேசியர்களுக்கு நியாயம் மறுக்கப்பட்டுள்ளது

1 mins read

கோலாலம்பூர்: மலேசியாவிலும் கம்போடியாவிலும் பல சிறுவர்களையும் குழந்தைகளையும் பாலியல் வன்கொடுமை செய்த பிரிட்டிஷ் ஆடவர் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று பிரிட்டனில் உள்ள சிறையில் கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்பட்டான்.

33 வயது ரிச்சர்ட் ஹக்கல் கொலையுண்ட செய்தி மலேசியர்களிடையே பலதரப்பட்ட கருத்துகளை ஏற்படுத்தியுள்ளது.

சிறுவர்களைப் பாலியல் வன்கொடுமை செய்தவர்களில் ஹக்கல் மிகவும் மோசமானவன் என்று பிரிட்டிஷ் ஊடகம் வர்ணித்துள்ளது. புகைப்படக் கலைஞனாக, ஆங்கில மொழி ஆசிரியராக, கொடையாளராகப் பாசாங்கு செய்து தென்கிழக்காசிய நாடுகளில் பல வசதி குறைந்த சமூகத்தினரின் நம்பிக்கையை ஹக்கல் பெற்றார். ஹக்கலின் மரணம் தமக்கு நிம்மதியைத் தருவதாக கோலாலம்பூரில் உள்ள பெண் ஒருவர் தெரிவித்தார். தமது இரண்டு வயது பெண் குழந் தையைத் தூக்கிக்கொண்டு செய்தியாளர்களிடம் பேசிய அந்தப் பெண் தமது பெயரை வெளியிடக்கூடாது என்று கேட்டுக்கொண்டார். ஹக்கல் குறித்து பேச அவர் மறுத்துவிட்டார். "ஹக்கலுக்கு தண்டனை விதிக்கப்பட்டதைப் பார்த்து பாதிக்கப்பட்டோர் பலர் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் தண்டனை யை அனுபவிக்காமலேயே அவர் இறந்துவிட்டார். தங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்று அவர்கள் உணர்கின்றனர்," என்று மலேசிய அமைப்பு ஒன்று கூறியது.