பாதுகாப்புப் படையினரை விரட்டிய போதைப்பொருள் கும்பல்

பாதுகாப்புப் படையினரை விரட்டிய போதைப்பொருள் கும்பல்

1 mins read
bb4f962d-e827-47f1-b2db-5ece0605f7ee
-

பாதுகாப்புப் படையினரைச் சுற்றி வளைத்து, அவர்களிடமிருந்து போதைப்பொருள் கும்பல் தலைவனின் மகனைத் துப்பாக்கிக்காரர்கள் விடுவித்த சம்பவம் மெக்சிகோவின் குலியகான் நகரில் நிகழ்ந்துள்ளது. போதைப்பொருள் கடத்தலில் கோலோச்சி வரும் 'சினலோவா' கும்பலின் தலைவனான 'எல் சாப்போ' குஸ்மன் அமெரிக்காவில் சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறான். அவனுடைய 12 பிள்ளைகளில் ஒருவனான ஒவிடியோ குஸ்மன் ஒரு வீட்டில் பதுங்கி இருந்ததை அறிந்ததும் பாதுகாப்புப் படையினர் அவனைப் பிடிக்க முயன்றனர். ஆயினும், அக்கும்பலைச் சேர்ந்த பலர் துப்பாக்கிகளை ஏந்தியபடி பாதுகாப்புப் படையினரைச் சுற்றி வளைக்க, அவர்களுக்குள் துப்பாக்கிச் சண்டை நடந்தது. சாலைகளில் நின்றிருந்த வாகனங்களும் கொளுத்தப்பட்டன. மோதலில் உயிரிழந்த சிலரது உடல்கள் சாலைகளில் கிடந்ததைப் படங்கள் காட்டின. இறுதியில், பாதுகாப்புப் படையினரின் உயிரைக் காக்கும் பொருட்டு, குஸ்மனைப் பிடிக்கும் முயற்சி கைவிடப்பட்டது. படம்: ராய்ட்டர்ஸ்