‌சீனப் பொருளியல் 6% வளர்ச்சி

‌சீனப் பொருளியல் 6% வளர்ச்சி

1 mins read

பெய்ஜிங்: இவ்வாண்டின் மூன்றாம் காலாண்டில் சீனாவின் பொருளியல்

6% வளர்ச்சி கண்டது. இருப்பினும், இது கடந்த

27 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மெதுவான வளர்ச்சி விகிதம் எனத் தெரிவிக்கப்பட்டது. முந்தைய காலாண்டில் சீனாவின் பொருளியல் வளர்ச்சி விகிதம்

6.2 விழுக்காடாக இருந்தது. உள்நாட்டுத் தேவைகள் குறைந்ததும் அமெரிக்கா உடனான வர்த்தகப் போர் நீடிப்பதுமே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.