வாஷிங்டன்: தெற்கு சிரியாவில் துருக்கி ராணுவத்திற்கும் அமெரிக்க ஆதரவு குர்தியப் படையினருக்கும் சண்டை நடந்து வரும் நிலையில், அது ‘விளையாட்டுத் திடலில் தங்கள் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள சிறுவர்கள் மோதிக்கொள்வது போன்றது’ என அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறி இருப்பது சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது.
இதனிடையே, அமெரிக்க எரிசக்தி துறை அமைச்சராக இருந்த ரிக் பெர்ரி பதவி விலகிவிட்டதாகவும் அந்த இடத்திற்குப் பொருத்தமான இன்னொருவரைத் தேர்வு செய்துவிட்டதாகவும் டிரம்ப் அறிவித்துள்ளார்.