லெபனானில் தொடரும் பதற்றநிலை

லெபனானில் தொடரும் பதற்றநிலை

1 mins read
242c0b37-5e7e-43de-8ea6-8a75d060c51e
-
Google News Preferred Icon

பெய்ருட்: லெபனானில் பதற்றநிலை தொடர்கிறது. கடந்த மூன்று நாட்களாக லெபனானில் அரசாங்கத்துக்கு எதிராகப் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன.

பொருளியல் நெருக்கடிநிலையைக் கண்டித்து லெபனான் நாட்டவர்கள் அதிருப்திக் குரல் எழுப்பியுள்ளனர்.

போராட்டங்கள் தொடரும் வகையில் தலைநகர் பெய்ருட்டின் மத்தியப் பகுதியில் சிலர் நேற்று கூடினர்.

நேற்று முன்தினம் நடைபெற்ற போராட்டத்தின்போது வங்கிகள் கடைகளின் கண்ணாடிச் சன்னல்கள் உடைக்கப்பட்டன.

சாலைகளில் பொருட்களைக் குவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அவற்றுக்குத் தீமூட்டினர்.

முன்வைக்கப்பட்டுள்ள பொருளியல் சீர்திருத்தங்களுக்கு இணக்கம் தெரிவிக்க தமது அரசியல் பங்காளிகளுக்கு 72 மணி நேரக் கெடு கொடுத்துள்ளார் பிரதமர் சாஹாட் அல் ஹரீரி. இந்தச் சீர்திருத்தங்கள் மூலம் பொருளியல் நெருக்கடியைத் தவிர்க்க முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, அரசாங்கம் கலைக்கப்படுவதை தாம் விரும்பவில்லை என்றார் ஹெஸ்புல்லா அமைப்பின் தலைவர் சயீது ஹசான் நஸ்ரல்லா.

கடுமையான நெருக்கடி

நிலையை லெபனான் எதிர்நோக்கும் இந்த வேளையில், அரசாங்கம் கலைக்கப்படுவது நிலைமையை மேலும் மோசமாக்கும் என்றார் அவர். அவரது உரை தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

அரசியல் லாபத்தை எதிர்பார்க்காமல் நாட்டின் நலனுக்கு அனைவரும் பாடுபட வேண்டும் என்றார் அவர்.