காபூல்: ஆப்கானிஸ்தான் நாட்டின் நங்கர்ஹார் மாநிலத்தில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் வெள்ளிக்கிழமை தொழுகையின்போது குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. சம்பவம் நிகழ்ந்தபோது பள்ளிவாசல் நிறைந்திருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர் தாக்குதலில் குறைந்தது 69 பேர் மாண்டதாகக் கூறப்படுகிறது. பலர் படுகாயம் அடைந்ததாகவும் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். குண்டு வெடிப்பு தொடர்பாக விசாரணை நடத்தப்படுகிறது. தாக்குதலை நடத்தவில்லை என்று தலிபான் தெரிவித்துள்ளது. தோள்பட்டையில் வைத்து பாய்ச்சப்படும் பீரங்கியை ஆப்கான் அரசாங்கப் படைகள் பள்ளிவாசல் நோக்கி பாய்ச்சியதாக சம்பவத்தை நேரில் கண்டோர் தெரிவித்ததாக தலிபான் அமைப்பின் செய்தித்தொடர்பாளர் கூறினார்.
ஆப்கான் பள்ளிவாசலில் குண்டு வெடிப்பு: குறைந்தது 69 பேர் மரணம்
1 mins read

