சிலியில் கலவரம்: அவசரநிலை பிரகடனம் செய்த அதிபர் பினேரா

சிலியில் கலவரம்: அவசரநிலை பிரகடனம் செய்த அதிபர் பினேரா

1 mins read

சன்டியாகோ: சிலி தலைநகர் சன்டியாகோவில் மிக மோசமான கலவரம் நடந்ததால் அந்நாட்டு அதிபர் செபாஸ்டியல் பினேரா நேற்று அவசரநிலை பிரகடனம் செய்தார்.

வாழ்க்கைச் செலவினம் அதிகமாக இருப்பதைக் கண்டித்து தலைநகர் சான்டியாகோவில் கலவரம் நடந்தது. அண்மையில் பொது போக்குவரத்துக் கட்டணம் உயர்த்தப்பட்டதைக் கண்டித்து ரயில் நிலையங்கள் , பேருந்துகள் ஆகியவற்றுக்குத் தீமூட்டப்பட்டன. கடைகள் உடைக்கப்பட்டு அவற்றில் இருந்த பொருட்களைக் கலவரக்காரர்கள் தூக்கிச் சென்றனர்.

நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர போலிசாரும் தீயணைப்புப் படையினரும் விரைந்தனர்.