நோம் பென்: பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சுற்றுப்பயணியைக் கும்பலாகப் பாலியல் பலாத்காரம் செய்ததாக மூவர் மீது கம்போடிய நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 43 வயது பிரெஞ்சுப் பெண் கம்போடிய போலிசாரிடம் புகார் செய்ததை அடுத்து மூன்று சந்தேக பேர்வழிகள் கைது செய்யப்பட்டனர்.
அதிகாலை 3 மணி அளவில் தனியாக நடந்து சென்றுகொண்டிருந்த அந்தச் சுற்றுப்பயணியைத் தங்கள் வாகனத்துக்குள் வலுக்கட்டாயமாக இழுத்து, ஆள் அரவமற்ற இடத்தில் அவரைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த மூவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு 15 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.

