புதுடெல்லி: இந்தியா, அமெரிக்கா இடையே தற்காப்புத் துறை வர்த்தகம் இந்த ஆண்டு இறுதிக்குள் 18 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அமெரிக்க தற்காப்பு அமைச்சின் தலைமையகமான பென்டகன் நேற்று தெரிவித்துள்ளது.
இவ்விரு நாடுகளுக்கு இடையிலான ஒன்பதாவது தற்காப்பு தொழில்நுட்பங்கள் மற்றும் வர்த்தக முன்னெடுப்பு (டிடிடிஐ) அடுத்த வாரம் புதுடெல்லியில் நடைபெற உள்ளது.
இந்தியாவுடனான பங்காளித்துவத்தை வலுப்படுத்த அமெரிக்கா கடப்பாடு கொண்டிருப்பதாகக் குறிப்பிட்ட கொள்முதல் மற்றும் பராமரிப்புக்கான அமெரிக்கத் தற்காப்பு அமைச்சின் துணை அமைச்சர் எலன் எம் லார்ட், இரு நாடுகளின் ராணுவங்களுக்கிடையிலான உறவுகள், ஒத்துழைப்பைத் தொடர விரும்புவதாகவும் கூறினார்.
"இரு நாடுகளுக்கு இடையிலான தற்காப்புத் துறை வர்த்தகம் இவ்வாண்டு இறுதிக்குள் 18 மில்லியன் அமெரிக்க டாலரை எட்டக்கூடும்," என்று அவர் நேற்று பென்டகனில் தெரிவித்தார். 2008ஆம் ஆண்டில் அது பூச்சியமாக இருந்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.
புதுடெல்லியில் நடைபெற உள்ள டிடிடிஐ கூட்டத்தில் திருவாட்டி லார்ட் பங்கேற்பார். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அமெரிக்கா உத்திபூர்வ வர்த்தக அதிகாரத்தை இந்தியாவுக்கு வழங்கியதையடுத்து, அமெரிக்க நிறுவனங்கள் அதிநவீன தொழில்நுட்பக் கருவிகளை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ய முடியும்.
நேட்டோ நாடுகளான ஜப்பான், தென்கொரியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு அமெரிக்கா வழங்கியுள்ள அதிகாரத்தைப் போன்றது இது.
இரு நாடுகளிலும் புதிய தற்காப்பு வளங்களை உற்பத்தி செய்வதன் தொடர்பில் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
இந்-தி-யா-வின் செயல்-பாட்டு வேக-மும் தொடர்பு விருப்-ப-மும் அதி-க-ரித்-தி-ருப்-பதை உணர்-வ-தாக அவர் சொன்-னார்.

