ஜகார்த்தா: இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோ, 58, இரண்டாவது முறையாக நேற்று அதிகாரபூர்வமாகப் பதவியேற்றுக்கொண்டார். பலத்த பாதுகாப்பு ஏற்பாடு
களுக்கு இடையே, நாடாளுமன்றத்தில் அவர் பதவியேற்றுக்கொண்டார். பதவியேற்புச் சடங்கை முன்னிட்டு, காவல்துறையையும் ராணுவத்தையும் சேர்ந்த 30,000க்கும் அதிகமான வீரர்கள் ஜகார்த்தாவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கும் அவரது துணைவியாரும் திரு விடோடோவின் பதவியேற்புச் சடங்கில் கலந்துகொண்டனர்.
மலேசியா, புருணை, ஆஸ்திரேலியா, கம்போடியா உள்ளிட்ட அண்டை நாடுகளைச் சேர்ந்த தலைவர்களும் பதவியேற்புச் சடங்கில் பங்கேற்றனர். ஐந்து ஆண்டுகள் நீடிக்கும் தமது இரண்டாவது, இறுதிப் பதவிக்காலத்தில் அதிகமான முதலீடுகளை ஈர்க்க திரு விடோடோ உறுதிபூண்டுள்ளார். மேலும், நாட்டின் மனிதவளத் துறையை மேம்படுத்துவதில் தாம் கவனம் செலுத்தப்போவதாகவும் அவர் கூறினார்.

