வாஷிங்டன்: ஜி7 அமைப்பு தலைவர்கள் மாநாட்டை தமது கோல்ஃப் விளையாட்டு உல்லாச விடுதியில் நடத்தும் திட்டத்தை அமெரிக்கா அதிபர் டோனல்ட் டிரம்ப் கைவிட்டுவிட்டார். அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலம், மயாமி நகரில் உள்ள கோல்ஃப் உல்லாச விடுதியில் அடுத்த ஆண்டு ஜி7 அமைப்பிலுள்ள நாடுகளின் தலைவர்கள் மாநாட்டை நடத்துவதற்கு திரு டிரம்ப் திட்டமிட்டிருந்தார்.
இதற்கு ஜனநாயகக் கட்சியினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அதிபர் பதவியைத் திரு டிரம்ப் தவறாக பயன்படுத்துவதாக அவர்கள் விமர்சித்தனர். இதையடுத்து, மாநாட்டை ஏற்று நடத்துவதற்கான திட்டத்தைத் தாம் கைவிட்டுவிட்டதாக திரு டிரம்ப் நேற்று முன்தினம் அறிவித்தார்.

