பினாங்கில் 600 தோட்டாக்கள் பறிமுதல்

பினாங்கில் 600 தோட்டாக்கள் பறிமுதல்

1 mins read

ஜார்ஜ்டவுன்: நேற்று முன்தினம் இரவு 7.30 மணி அளவில் பினாங்கில் உள்ள அடுக்குமாடி வீடு ஒன்றில் மலேசிய போலிசார் போதைப்பொருள் தேடி அதிரடிச் சோதனை நடத்தியபோது இரண்டு கையெறி குண்டுகளையும் 600க்கும் மேற்பட்ட தோட்டாக்களையும் கண்டெடுத்தனர்.

சனிக்கிழமையன்று கைது செய்யப்பட்ட நபரிடம் விசாரணை நடத்தியபோது அந்த வீட்டிற்கு அதிகாரிகள் விரைந்தனர். வீட்டில் இருந்த தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.