இந்தோனீசிய அமைச்சரவை: இணையவிருக்கும் பிரபோவோ

இந்தோனீசிய அமைச்சரவை: இணையவிருக்கும் பிரபோவோ

1 mins read

ஜகார்த்தா: இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோவின் அமைச்சரவையில் இணைய இருப்பதாக அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் பிரபோவோ சுபியாந்தோ நேற்று அறிவித்தார்.

தற்காப்பு அமைச்சை வலுப்படுத்த சுபியாந்தோவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, "அமைச்சரவையை வலுப்படுத்த எங்களை நாடினர். உதவி செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம்," என்றார் திரு பிரபோவோ.

தற்காப்பு அமைச்சராக நியமிக்கப்படுவாரா என்பது குறித்து முன்னாள் ராணுவத் தலைவரான திரு பிரபோவோ தெளிவுபடுத்தவில்லை.

"அதிபர் ஜோக்கோவியின் இலக்குகளை என்னால் எட்ட முடியும். அதற்காக நான் கடுமையாக உழைப்பேன்," என்றார் அவர்.

அமைச்சரவை குறித்து 15 பேரை அதிபர் ஜோக்கோவி நேற்று சந்திக்க இருந்ததாக அதிபர் மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.