'பாஸ்' முன்னாள் துணைத் தலைவர் மீது ஊழல் குற்றச்சாட்டு

'பாஸ்' முன்னாள் துணைத் தலைவர் மீது ஊழல் குற்றச்சாட்டு

2 mins read

கோலாலம்பூர்: மலேசியாவின் 'பாஸ்' அரசியல் கட்சியின் முன்னாள் துணைத் தலைவரான நஷாருதின் மாட் இசா, தமக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள கள்ளப்

பணத்தை நல்ல பணமாக்குதல் தொடர்பிலான மூன்று குற்றச்சாட்டுகளுக்கும் நம்பிக்கை மோசடி தொடர்பிலான 30 குற்றச்சாட்டுகளுக்கும் எதிராக வழக்கு கோரியிருக்கிறார்.

நான்கு மில்லியன் ரிங்கிட் (S$1.3 மில்லியன்) மதிப்புள்ள 33 குற்றச்சாட்டுகளுக்கும் தமக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை என்று திரு நஷாருதின் கூறியுள்ளார் என்று அமர்வு நீதிமன்றத்தின் நீதி பதி ரோஸிலா சாலே நேற்று தெரி வித்தார். கள்ளப்பணத்தை நல்ல பணமாக்குதல் தொடர்பான மூன்று குற்றச்சாட்டுகளுக்காக 57 வயது நஷாருதின் கள்ளப்பணத்தை நல்ல பணமாக்குதலுக்கு எதிரான சட் டம், பயங்கரவாதத்துக்கு நிதியுதவி செய்தலுக்கு எதிரான சட்டம் ஆகியவற்றின்கீழ் குற்றஞ்சாட்டப் பட்டுள்ளார். இதற்கு குறைந்தது 15 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்கக்கூடும் அல்லது ஐந்து மில்லியன் ரிங்கிட் அபராதம் விதிக்கப்படலாம். இவர் இந்தக் குற்றத்தை கடந்த ஆண்டு நவம்பருக்கும் டிசம்பருக்கும் இடையில் புரிந்து உள்ளார் என்று நம்பப்படுகிறது.

மோசடி தொடர்பிலான 30 குற்றங்களுக்கு நஷாருதினுக்கு இரண்டு முதல் 20 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை கிடைக்கக்கூடும்.

இந்தக் குற்றங்களை அவர் 2015ஆம் ஆண்டிலிருந்து 2018ஆம் ஆண்டு வரை புரிந்துள்ளார் என்று கூறப்பட்டது.

கள்ளப்பணத்தை நல்ல பணமாக்குதல் தொடர்பான மூன்று குற்றச்சாட்டுகளுக்கு 80,000 ரிங் கிட் பிணையும் மோசடி தொடர்பி லான 30 குற்றங்களுக்கு 250,000 ரிங்கிட் பிணையும் அனுமதித்தார் நீதிபதி ரோஸிலா.

இந்த வழக்கு முடியும் வரை நஷாருதின் நாட்டை விட்டு வெளியேறக்கூடாது என்பதற்காக அவர் தமது கடப்பிதழை நீதிமன்றத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.