சுபாங் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு கோபுரத்தில் சேதம்; பயணங்கள் தாமதம்

சுபாங் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு கோபுரத்தில் சேதம்; பயணங்கள் தாமதம்

1 mins read
a58148a5-d067-4399-b5ad-c05117c5b248
-

மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்திலுள்ள சுபாங் விமான நிலையத்தின் உட்கூரையில் சில பகுதிகள் சேதமடைந்ததால் விமானப் போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

மேசைக்கணினிகளைக் கொண்டுள்ள ஓர் அறையில் இருந்த ஊழியர் மீது உட்கூரையின் சில பகுதிகள் விழுந்ததைக் காட்டும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வலம் வருகிறது.

போக்குவரத்து கட்டுப்பாட்டு கோபுரத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதற்காக வருந்துவதாக 'மலேசியா ஏர்போர்ட்ஸ்' விமான நிலைய நிறுவனம், நேற்று மாலை ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தது. பிரச்சினை தீர்க்கப்படும்வரை பயணிகளை அமைதியுடன் இருக்குமாறு மலேசியா ஏர்போர்ட்ஸ் தனது பதிவில் கேட்டுக்கொண்டது.