டிரம்ப்: அமெரிக்காவின் சமய சுதந்திரத்தைத் தீபாவளி நினைவூட்டுகிறது

டிரம்ப்: அமெரிக்காவின் சமய சுதந்திரத்தைத் தீபாவளி நினைவூட்டுகிறது

1 mins read
c87848f5-ba93-4d40-86cf-67f08b5fde1b
-

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், இந்துக்கள், ஜைனர்கள், சீக்கியர்கள், பெளத்தர்கள் ஆகியோருக்குத் தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார். அமெரிக்காவின் சமய சுதந்திரத்தைத் தீபாவளி நினைவூட்டுவதாக தமது அறிக்கையில் கூறினார்.

"எங்கள் அரசியல் சாசனத்தில் உறுதி செய்யப்பட்டுள்ள உரிமைகள் அனைத்தையும் எனது நிர்வாகம் தொடர்ந்து பாதுகாக்கும். ஒவ்வொருவரும் தங்கள் நம்பிக்கைகளுக்கும் மனச்சாட்சிக்கும் ஏற்ப அனைத்து மதத்தினரும் வழிபாடு செய்ய இந்த உரிமைகள் வகை செய்கின்றன," என்று அவர் தெரிவித்தார். இருளை ஒளி களைவது, தீமையை நன்மை அழிப்பது, அறியாமையை அறிவு வெல்வது ஆகியவற்றை இந்தத் திருவிழாவின்போது கொண்டாடப்படுவதாகத் திரு டிரம்ப் கூறினார். நேற்று அவர், தமது அலுவலகத்தில் வெள்ளை மாளிகையில் பணிபுரியும் இந்திய அமெரிக்கர்கள் சிலருடன் அந்தப் பண்டிகையைக் கொண்டாடினார்.