மலேசியாவில் வெள்ளம்: பலர் பாதிப்பு

மலேசியாவில் வெள்ளம்: பலர் பாதிப்பு

1 mins read
c328de73-e031-4741-b74d-309e7a24c76c
-

கோலாலம்பூர்: மலேசியாவில் கனமழை பெய்து வருவதால் ஐந்து மாநிலங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

தலைநகர் கோலாலம்பூரில் உள்ள பல சாலைகளில் வெள்ள நீர் புகுந்துவிட்டதாகவும் மரங்கள் வேரோடு சாய்ந்ததாகவும் பெர்னாமா செய்தி நிறுவனம் தெரிவித்தது.

கிள்ளான் பள்ளத்தாக்கிலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

ஜோகூர், நெகிரி செம்பிலான், சிலாங்கூர், பேராக், பினாங்கு ஆகிய மாநிலங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

அந்த மாநிலங்களைச் சேர்ந்த 1,000க்கும் மேற்பட்டவர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்காக அமைக்கப்பட்டிருக்கும் துயர்

துடைப்பு மையங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

சமூக மண்டபங்கள், பள்ளி மண்டபங்கள், பள்ளிவாசல்களில் உள்ள மண்டபங்கள் ஆகியவை துயர்துடைப்பு மையங்களாக தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளன.

ஜோகூர் மாநிலத்தின் பத்து பாஹாட் மாவட்டத்திலிருந்து 55 பேரையும் பொந்தியான் மாவட்டத்திலிருந்து 159 பேரையும் மீட்புப் பணியாளர்கள் பத்திரமாக வெளியேற்றி உள்ளனர்.

ஜோகூரின் பொந்தியான் மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் மூழ்கிய கார்கள்.

படம்: பெர்னாமா