பாக்தாத்: ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அரசாங்கத்துக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்றன. அந்நாட்டின் நாடாளுமன்றம் கூடவிருந்தபோது சாலைகளில் ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடினர்.
ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க பாதுகாப்புப் படையினர் கண்ணீர் புகை வீசியதாக ஏஎஃப்பி செய்தி நிறுவனம் தெரிவித்தது.
பாதுகாப்புப் படையினர் துப்பாக்கியால் சுட்டதில் பாக்தாத்திலும் தென்ஈராக்கிலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மாண்டனர். அரசாங்க அனுலகங்களுக்கு தீவைக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் கூறினர். நேற்று காலை ஆர்ப்பாட்டக்காரர்கள் நாடாளுமன்றம் அமைந்துள்ள இடத்தை நோக்கிச் சென்றனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் விடுக்கும் கோரிக்கைகள் பற்றி கலந்துரையாட நாடாளுமன்றம் நேற்று கூடியது.

