ஹாங்காங்: ஹாங்காங்கில் கடந்த ஐந்து மாதங்களாக அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நீடிக்கும் வேளையில் பொருளியல் மந்தநிலைக்கு ஹாங்காங் சென்றுவிட்டதாக அந்நாடு நிதி அமைச்சர் அறிவித்துள்ளார்.
ஆர்ப்பாட்டங்கள் காரணமாக நமது பொருளியல் பெரிய அளவில் பாதிக்கப்பட்டதாக நிதி அமைச்சர் பால் சான் கூறினார். மூன்றாவது காலாண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி பொருளியல் மந்தநிலைக்குச் சென்றுவிட்டதைக் காட்டுவதாக அவர் கூறினார்.
இந்நிலையில் ஹாங்காங்கில் பத்திரிகையாளர்களுக்கு ஆதரவாக ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.

