யங்கூன்: மியன்மாரின் ராக்கைன் மாநிலத்தில் போராளிகளால் பிணைபிடிக்கப்பட்ட 50 பேரில் 14 பேரை காப்பாற்றியிருப்பதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. போராளிகள் குழு கடந்த சனிக்கிழமை 50 பேரை சிறைப்பிடித்தது. அவர்களில் பெரும்பாலோர் பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்கள். ராக்கைன் மாநிலத்தில் தன்னாட்சி கோரி போராடி வரும் போராளிகளை எதிர்த்து ராணுவம் சண்டையிட்டு வருகிறது. இதனால் சண்டைக்குப் பயந்து ஏராளமான மக்கள் அம்மாநிலத்தைவிட்டு வெளியேறிவிட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறினார். கடந்த டிசம்பர் மாதம் ராக்கைன் மாநிலத்தில் போராளிகளுக்கு எதிராக ராணுவம் ஒடுக்கு முறையை கையாண்டபோது ரோஹிங்யா மக்கள் 730,000 பேர் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
பிணையாளிகளில் 14 பேரை காப்பாற்றிய மியன்மார் ராணுவம்
1 mins read

