பியுனோஸ் ஐரிஸ்: அர்ஜெண்டினாவில் நடந்த அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் அல்பெர்ட்டோ பெர்னாண்டஸ் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். வெற்றி பெறுவதற்குத் தேவையான 45 விழுக்காட்டிற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று திரு பெர்னாண்டஸ் வெற்றி பெற்றுள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் கூறுகின்றன. ஞாயிற்றுக்கிழமை நடந்த இரண்டாவது சுற்று தேர்தலில் திரு பெர்னாண்டசை எதிர்த்துப் போட்டியிட்ட மோரிகோ மெக்ரி தோல்வியை ஒப்புக்கொண்டதுடன் தேர்தலில் வெற்றி பெற்ற திரு பெர்னாண்டஸிற்கு தமது வாழ்த்தினை தெரிவித்துக்கொண்டுள்ளார். பதவி மாற்றம் குறித்து பேச்சு நடத்த அதிபர் மாளிகைக்கு வருமாறு திரு பெர்னாண்டஸிற்கு திரு மெக்ரி அழைப்பு விடுத்துள்ளார். திரு பெர்னாண்டஸ் வரும் டிசம்பர் 10ஆம் தேதி அதிபராக பொறுப்பேற்றுக்கொள்வார்.
அர்ஜெண்டினா அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி
1 mins read

