ஜப்பான்: பேரிடர் நிவாரணப் பணிகளுக்கு 6.5 மி. டாலர் செலவு

ஜப்பான்: பேரிடர் நிவாரணப் பணிகளுக்கு 6.5 மி. டாலர் செலவு

1 mins read

தோக்கியோ: தொடர்ந்து கடும் புயல், கனமழை, வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு போன்ற இயற்கைப் பேரிடர்களைச் சந்தித்து வரும் ஜப்பான் உடனடி பேரிடர் நிவாரணப் பணிகளுக்கு 6.5 மில்லியன் அமெரிக்க டாலர் (S$8.9 மில்லியன்) செலவிட பிரதமர் சின்ஷோ அபேயின் அரசாங்கம் இணங்கியுள்ளது. குறிப்பாக பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள வரவு செலவுத் திட்ட அறிக்கையில் கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்று பிரதமர் அபே தெரிவித்தார். இருப்பினும் ஜப்பானில் கடும் ஊழியர் பற்றாக்குறை நிலவுவதால் பழுதுபார்ப்பு மற்றும் இதர பணிகளுக்கு ஊழியர் கிடைப்பது மிகவும் சிரமம் என்று கூறப்படுகிறது.