கரப்பான்பூச்சியை அழிக்க பெட்ரோல் குண்டு

1 mins read
29a7c02b-3945-4019-b13c-abdb4aed364b
கரப்பான்பூச்சியை அழிப்பதற்காக வீட்டுத் தோட்டத்துக்கே ஒருவர் பெட்ரோல் குண்டு வைத்து தகர்த்துள்ளார். படம்: Klara Sjöberg என்பவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றப்பட்ட காணொளியிலிருந்து. -

கரப்பான்பூச்சியை அழிப்பதற்காக வீட்டுத் தோட்டத்துக்கே ஒருவர் பெட்ரோல் குண்டு வைத்த ருசிகர சம்பவம் பிரேசிலில் நிகழ்ந்துள்ளது. ஆனால், அதற்கும் அசராமல் கரப்பான்பூச்சி தப்பியதே சம்பவத்தின் சிறப்பு.

சீசர் ஸ்மித்ஸ் என்பவர், தம் வீட்டின் பின்புறமுள்ள தோட்டத்தில் கரப்பான் பூச்சி தொல்லை அதிகம் இருந்ததால் அவற்றை அழிக்க பல்வேறு முயற்சிகள் எடுத்தார். அவை பயனற்றுப் போகவே, கரப்பான்பூச்சிகள் தங்கியிருந்ததாக நம்பப்பட்ட குழிக்குள் பெட்ரோலை ஊற்றி தீவைத்தார்.

அதனையடுத்து அவரே அஞ்சி ஓடும் வண்ணம் பலத்த சத்தத்துடன் வெடிப்பு நிகழ்ந்தது. ஆனால், அதெற்கெல்லாம் அசராமல் கரப்பான்பூச்சி அவரது காலடிக்கு அருகிலேயே தப்பி ஓடியதும் காணொளியில் (19வது வினாடியில்) பதிவாகியுள்ளது.

ஆயினும் தோட்டம் மீண்டும் சுத்தப்படுத்தப்பட்டிருப்பதாகவும் கரப்பான்பூச்சிகளின் தொல்லை குறைந்திருப்பதாகவும் சீசர் தெரிவித்துள்ளார்.