ஈராக் போராட்டத்தில் 18 பேர் பலி

ஈராக் போராட்டத்தில் 18 பேர் பலி

1 mins read

பாக்தாத்: ஈராக் நாட்டில் அரசுத் துறைகளில் பெருகிவரும் ஊழல் மற்றும் வேலை இல்லா திண்டாட்டம் ஆகியவற்றை எதிர்த்து நடைபெற்றுவரும் போராட்டத்தில் 18 பேர் உயிரிழந்தனர்.

தலைநகர் பாக்தாத் உள்பட நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது. இதுவரை போராட்டத்தில் ஈடுபட்ட 150க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கர்பாலா நகரில் நடைபெற்ற போராட்டத்தில் 18 பேர் கொல்லப்பட்டனர்.

இது குறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில், கர்பாலாவில் உள்ள இமாம் ஹுசைன் மசூதி அருகே போராட்டக்காரர்கள் முகாமிட்டு இருந்தனர். கலைந்து செல்லுமாறு அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

ஆனால், அவர்கள் செல்ல மறுத்ததால் போலிசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 18 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.