விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பு; நீதிமன்றத்தில் 10 சந்தேக நபர்கள் மீது குற்றச்சாட்டு

விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பு; நீதிமன்றத்தில் 10 சந்தேக நபர்கள் மீது குற்றச்சாட்டு

1 mins read
c28d93e5-4987-437b-a19b-a8094e7ec490
-

பெட்டாலிங் ஜேயா: விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பில் இருந்ததாகச் சந்தேகிக்கப்படும் 10 ஆடவர்கள் மீது அமர்வு நீதிமன்றத்தில் இன்று குற்றம் சாட்டப்பட்டது. அவர்களில் இருவர் ஜனநாயக செயல் கட்சியைச் சேர்ந்தவர்கள்.

மலாக்காவின் செயற்குழு உறுப்பினர்கள் ஜி.சாமிநாதன், செரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் பி. குணசேகர் உள்ளிட்ட 10 பேர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

நாளை மேலும் இருவர் குற்றம் சாட்டப்படுவர்.

சம்பந்தப்பட்ட பத்து பேரும் பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்பட்டனர். நீதிமன்றத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை டிசம்பர் மாதம் 16ஆம் தேதி எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. எவருக்கும் பிணை கொடுக்கப்படவில்லை.