விவசாயப் பொருட்களை பெய்ஜிங் வாங்க மறுப்பதாக அமெரிக்கா புகார்

விவசாயப் பொருட்களை பெய்ஜிங் வாங்க மறுப்பதாக அமெரிக்கா புகார்

1 mins read

பெய்ஜிங்: அமெரிக்காவின் விவசாயப் பொருட்களை பெய்ஜிங் வாங்க மறுக்கிறது என்று அமெரிக்கா புகார் கூறியுள்ளது.

இதனால் அமெரிக்க-சீன வர்த்தகப் பேச்சில் முடிவு ஏற்படவில்லை.

பொதுவில் பேசிய அதிபர் டிரம்ப், ஐம்பது பில்லியன் டாலர் மதிப்புள்ள அமெரிக்க விவசாயப் பொருட்களை சீனாவால் வாங்க முடியும் என்று கூறியுள்ளார்.

இது, வர்த்தகப் போர் தொடங்குவதற்கு முன்பு சீனா வாங்கிய அமெரிக்க விவசாயப் பொருட்களின் மதிப்பில் இரண்டு மடங்காகும்.

பேச்சு வார்த்தையில் அமெரிக்க அதிகாரிகள் தொடர்ந்து சீனாவை நெருக்கி வருகின்றனர். ஆனால் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அமெரிக்க விவசாயப் பொருட்களை வாங்க சீனா தயக்கம் காட்டி வருகிறது.

சந்தை நிலவரத்தை அடிப்படையாகக் கொண்டு எவ்வளவு பொருட்கள் வாங்க வேண்டும் என்பதை தாங்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்று பெய்ஜிங் கூறுகிறது.

"சீனாவில் உள்ள மக்களுக்குத் தேவையில்லாத பொருட்களை ஏராளமாக வாங்க சீன அரசு விரும்பவில்லை.

"அதுவும் ேதவை இல்லாத நேரத்தில் வாங்க சீனாவுக்கு விருப்பமில்லை," என்று சீன அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அமெரிக்காவின் விவசாயப் பொருட்கள் சீனாவில் நுழைவதால் உள்ளூர் சந்தைகளைப் பாதிக்கும். சீனாவில் விவசாயப் பொருட்களைக் குவித்தால் விலைகளில் கடுமை யான விளைவுகளை ஏற்படுத்தும். தேவைக்கு ஏற்ப விவசாயப் பொருட்கள் இருப்பதும் பாதிக்கப் படும் என்று மேலும் அந்த அதிகாரி கூறினார்.

ஆனால் அமெரிக்க விவசாயப் பொருட்களை பெருமளவில் வாங்க வேண்டும் என்று அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.