தாய். அரண்மனையிலிருந்து நான்கு அதிகாரிகள் நீக்கம்

தாய். அரண்மனையிலிருந்து நான்கு அதிகாரிகள் நீக்கம்

1 mins read

பேங்காக்: தாய்லாந்து மன்னர் மஹா வஜ்ஜிரலோங்கார்ன் அரண்மனை பணியிலிருந்து மேலும் நான்கு அதிகாரிகளை நீக்கியுள்ளார்.

தாய்லாந்து அரண்மனை வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் படுக்கை அறை பாதுகாவல் அதிகாரிகளான இருவர் 'தீவிர கொடூர நடத்தை', தகாத பாலியல் உறவு காரணமாக நீக்கப்பட்டனர் என்று தெரிவித்தது.

மற்றொரு அரண்மனை ஆவணத்தில் கடமையைச் சரிவர செய்யாத, தங்களுடைய பதவிக்கும் தகுதிக்கும் ஏற்ற வகையில் கௌரமாக நடக்காத இரு ராணுவ அதிகாரிகள் நீக்கப்பட்டதாக தெரிவித்தது.

நான்கு அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட சிறப்பு தகுதிகள் ரத்து செய்யப்பட்டதாகவும் அறிக்கை தெரிவித்தது.

கடந்த வாரம் அரண்மனை சேவைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் ஒழுங்கீனமாக நடந்துகொண்ட ஆறு அதிகாரிகள் நீக்கப்பட்டனர்.

அவர்களில் ஒருவர், படுக்கை அறை காவல் பணியில் இருந்த தாதி என்று தெரிவிக்கப்பட் டது.