ஆசிய வம்சாவளியினரைக் குறிவைத்த அமெரிக்க கொள்ளையர்கள்

ஆசிய வம்சாவளியினரைக் குறிவைத்த அமெரிக்க கொள்ளையர்கள்

1 mins read

அமெரிக்காவில் இந்தியர்கள் உட்பட ஆசிய வம்சாவளியினரைக் குறிவைத்து அவர்களது வீடுகளுக்குள் புகுந்து கொள்ளையடித்த கும்பலின் தலைவி கைது செய்யப்பட்டிருக்கிறார். அந்நாட்டின் பல்வேறு மாநிலங்களில் மூன்று ஆண்டுகளாக இந்தக் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 44 வயது சாக்கா லெசார் கேஸ்ட்ரோவுக்கு (படம்: நியூயார்க் டைம்ஸ்) 37 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நிதி அமைப்புகளின் மீதான நம்பிக்கை மற்ற இனத்தவரைக் காட்டிலும் ஆசிய வம்சாவளியினருக்குக் குறைவாக இருப்பதால் அவர்கள் தங்களது வீடுகளில் அதிக அளவு தங்கமும் ரொக்கமும் வைத்திருப்பர் என்று நினைத்த கேஸ்ட்ரோ, அத்தகையோர் தங்கும் வீடுகளையே குறிவைத்தார். 2011ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டுவரை கேஸ்ட்ரோவின் தலைமையில் 10க்கும் அதிகமான கொள்ளைக்காரர்கள் குறைந்தது 22 குடும்பங்களிடமிருந்து கொள்ளையடித்தனர். 2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கேஸ்ட்ரோ கைது செய்யப்பட்டார்.