தாய்லாந்தின் தலைநகர் பேங்காக்கிலுள்ள ஓர் உணவகம், மிகப்பெரிய பர்கரைச் சாப்பிடச் சொல்லி, உணவுப் பிரியர்களுக்குச் சவால் விடுத்துள்ளது.
மெயோனிஸ், பொரித்த பன்றித் துண்டுகள், பொரித்த வெங்காய வளையங்கள் ஆகியவற்றால் போர்த்தப்பட்ட 6 கிலோகிராம் இறைச்சி இந்த பர்கரில் உள்ளது.
'கிரிஸ் ஸ்டீக்ஸ் அன்ட் பர்கர்ஸ்' என்ற அந்த உணவகம், அந்த பர்கரை ஒன்பது நிமிடங்களில் சாப்பிடுவோருக்கு 10,000 பாத் (450 வெள்ளி) வெகுமதியாக அளிக்கிறது.
இதுதான் தாய்லாந்தின் ஆகப் பெரிய பர்கர் என்று உணவக உரிமையாளர் கோம்டெக் கோங்சுவான் பெருமையுடன் கூறுகிறார். இந்த பர்கரை மூன்று வாடிக்கையாளர்கள் வெற்றிகரமாக உண்டதை அடுத்து போட்டிக்கு ஏற்பாடு செய்வதற்கான யோசனை வந்ததாகத் திரு கோங்சுவான் கூறினார். இதில் பலர் ஆர்வத்துடன் கலந்துகொள்ள முன்வருவதாக அவர் தெரிவித்தார்.

