ஏவுகணைகளைக் கடலுக்குள் பாய்ச்சிய வடகொரியா

ஏவுகணைகளைக் கடலுக்குள் பாய்ச்சிய வடகொரியா

1 mins read

சோல்: ஜப்பானுக்கும் கொரிய தீபகற்பத்துக்கும் இடையில் உள்ள கடற்பகுதியில் வடகொரியா இரண்டு ஏவுகணைகளைப் பாய்ச்சியிருப்பதாக ஜப்பானிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

அந்த ஏவுகணைகள் ஜப்பான் கடற்பகுதிக்குள் விழவில்லை என்று ஜப்பானிய அதிகாரிகள் கூறினர்.

மிசாவாவில் உள்ள அமெரிக்க ஆகாயப் படை முகாம் விழிப்புநிலையில் உள்ளது.

பாய்ச்சப்பட்ட ஏவுகணைகள் 370 கிலோ மீட்டர் தூரம் சென்றதாகவும் 90 கிலோ மீட்டர் உயரத்தை எட்டியதாகவும் தென்கொரிய ராணுவம் கூறியது.