பத்தாண்டுக்குமுன் தயாரான பர்கரை காண அலைமோதும் மக்கள் கூட்டம்

பத்தாண்டுக்குமுன் தயாரான பர்கரை காண அலைமோதும் மக்கள் கூட்டம்

1 mins read

ரெய்க்ஜவிக்: உலகின் ஆகப் பிரபலமான துரித உணவுக் கடையான மெக்டோனல்ட்ஸ் இல்லாத ஒரே மேற்கத்திய நாடு ஐஸ்லாந்துதான். அங்கு இருந்த தனது மூன்று கிளைகளை 2009ல் அந்த நிறுவனம் மூடிவிட்டது. அந்த ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி கடைசியாக வாங்கப் பட்ட பர்கர் உணவு (படம்) இன்னமும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. கண்ணாடிப் பெட்டியில் வைக்கப்பட்டுள்ள இந்த உணவு மெதுவாகக் கெட்டுப் போவதை இணையம் வழியாக ஒரு நாளைக்கு 400,000 பேருக்கு மேல் அதைக் காண்பதாகக் கூறினார் இந்த உணவு வைக்கப்பட்டுள்ள 'ஸ்னோட்ரா ஹவுஸ்' என்ற விடுதியின் உரிமையாளர். அத்துடன், இதைக் காண்பதற்காகவே உலகெங்கும் இருந்து பலர் தினமும் வந்து செல்வதாகவும் அவர் கூறினார்.